25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


“ஊட்டச்சத்தை  உறுதி செய்” திட்டத்தின் 2-ம் கட்டத்தினை நிதி, சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் 2-ம் கட்டத்தினை நிதி, சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்(15.11.2024) அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை ரூ.22 கோடி  மதிப்பீட்டில் தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், சாலை மறைக்குளம்  கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தில்;, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,   நிதி, சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் “ஊட்டச்சத்தை  உறுதி செய்” திட்டத்தின் 2-ம் கட்டத்தினை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு,  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.05.2022 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க 'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற புதிய திட்டத்தை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் 21.5.2022 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும்.  ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும்.எனவே தான், தற்போது 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் என்பது மிக முக்கியத்துவம்  வாய்ந்தது. ஒரு சமுதாயம் நோயற்ற சமுதாயமாக இருந்தால் தான் அந்த சமுதாயம் உருவாக்ககூடிய தலைமுறை எதிர்காலத்தில் ஒரு திடகாத்திரமான சமுதாயமாக இருக்க முடியும். ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளை நாம் உருவாக்கினோம் என்றால், நாளை அந்த குழந்தைகள் வளர்ந்து வரக்கூடிய காலத்தில் எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை எதிர்க்கக்கூடிய சக்தியை தங்களுடைய இளமையிலேயே இழந்தவர்களாக ஆகிவிடுவார்கள்.எனவே தான் ஒரு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தின் உடைய பொருளாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையாக தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டு காரணிகளை நாம் தொன்று தொட்டு மிக முக்கியமாக கருதி அதற்கான முக்கியத்துவத்தோடு நாம் செயலாற்றி வருகிறோம்.

நீண்ட தூரம் கஷ்டப்பட்டு சென்று பாடம் கற்பது என்பது தற்போது மாறி விட்டது. நாம் இருக்கக்கூடிய இடத்திலேயே கல்வி கற்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தந்த பகுதிகளில் ஆரம்ப பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் திருச்சுழி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக்கல்லூரி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அது போல இந்த சமுதாயத்தில் கல்விக்கு இணையாக சுகாதாரம் மற்றும்; மக்கள் நலனில் கருத்தில் கொண்டு   கடைக்கோடியில் உள்ள கிராமம் வரை மருத்துவ சேவை வழங்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய 0-6 மாத குழந்தைகளில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டசத்தை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக எதிர்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாத குழந்தைகளாக உருவாக முடியும். நம்முடைய குழந்தைகள் தான் நம் சமுதாயத்தின், நாட்டின் எதிர்காலம். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் அடுத்து வரக்கூடிய 30 ஆண்டுகளில் அவர்கள் வளர்ந்து மனிதர்களாக உருவாகின்ற போது, நல்ல ஆரோக்கியமான தலைமுறை உருவாகும். அதற்குத்தான்; இந்த திட்டத்தை  தமிழக அரசு செயல்படுத்துகிறது.எனவே, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் மூலம்  அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையை முறையாக கணக்கீடு செய்து எந்த ஒரு குழந்தையும் விடுபட்டு விடாமல் இதனை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News