சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் இராஜபாளையம் இராஜீக்கள் கல்லூரியுடன் இணைந்து நடத்தும் ஒரு நாள் பாரம்பரிய சுற்றுலா
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில், சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் இராஜபாளயம் இராஜீக்கள் கல்லூரியுடன் இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ/மாணவியர் கலந்து கொள்ளும் ஒரு நாள் பாரம்பரிய சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் (01.08.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் குறித்து, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய பாரம்பரிய தலங்களான திருத்தங்கல் திருநின்ற நாராயண பெருமாள் கோவில், ஈஞ்சார் நடுவங்குளம் கோவில், வெம்பக்கோட்டை அகழ்வாய்வு மற்றும் அணை, குகன்பாறை, செவல்பட்டி குகை கோவில் உள்ளிட்ட பாரம்பரிய வரலாற்றுத் தடங்களை பள்ளி ஆசிரியர்கள்; மற்றும் கல்லூரி மாணவ/மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் இப்பாரம்பரிய சுற்றுலா மாவட்ட நிர்வாகம் மூலமாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரலாற்று காலத்தில் இருந்து நாயக்கர் மன்னர் காலம் வரை சுமார் 400 ஆண்டு காலம் முன்னர் வரை உள்ள எல்லா காலகட்டத்திலும் உள்ள வரலாற்று சின்னங்கள் நமது மாவட்டத்தில் உள்ளன. இந்த சுற்றுலா தளங்கள் குறித்து ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு எடுத்து கூறும் விதமாக தான் இந்த விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி.தி.உமாதேவி, வரலாற்று ஆய்வாளரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் திரு.சொ.சாந்தலிங்கம், இராஜபாளையம் இராஜீக்கள் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் திரு.கந்தசாமி, அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் முனைவர் திரு.கு.பால்துரை, தொல்லியல் அலுலவர் திருமதி சண்முகவள்ளி, விருதுநகர் மாவட்ட அரசு தனியார் பள்ளிகளின் வரலாற்று ஆசிரியர்/ ஆசிரியைகள் (25 பேர்கள்) மற்றும் VHNSN கல்லூரி மாணவ/மாணவியர்கள் (25 பேர்கள்) என மொத்தம் 50 பேர் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply