விளாம்பழ பச்சடி
தேவையான பொருட்கள் - விளாம்பழம் சிறியது, வெல்லம் 1 சிறிய எலுமிச்சை அளவு, தயிர் 2 கரண்டி,உளுந்தம் பருப்பு கால் ஸ்பூன், கடுகு ஒரு ஸ்பூன், வத்தல் மிளகாய் 1 பெரியது.
செய்முறை - முதலில் விளாம்பழத்தை தரையில் போட்டு பார்த்து, அது ஒடாமல் இருந்தால் அதுதான் நல்ல பழம், வாங்கும் போது இப்படி பார்த்தே வாங்க வேண்டும். அதன் பிறகு ஓட்டை உடைத்து உள்ளே இருக்கும் பழத்தை எடுக்க வேண்டும். அந்தப்பழத்துடன் வெல்லத்தைப் போட்டு நன்றாக மசிக்க வேண்டும். பிறகு தயிர் விட்டு, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்தவுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகாய் வத்தல் இவற்றை தாளித்துகொட்ட வேண்டும்.
0
Leave a Reply