கேபேஜ் எக் நூடுல்ஸ் .
தேவையான பொருட்கள்- 3 பாக்கெட் நூடுல்ஸ், 1/2 முட்டை கோஸ்,
6 முட்டை,1 வெங்காயம்,2 பச்சை மிளகாய்,1ஸ்பூன் கடலைப்பருப்பு,
சிறிதளவுகறிவேப்பிலை,தேவையானஅளவு உப்பு,1/4ஸ்பூன் மஞ்சள் தூள்,
1ஸ்பூன் மிளகு தூள்,3 பாக்கெட்மேகி மசாலா,தேவையான அளவு தண்ணீர்
சிறிதளவுகொத்தமல்லி, 2மேசைக்கரண்டி எண்ணெய்.
செய்முறை வாணலியில் தண்ணீர் ஊற்றி1 ஸ்பூன் எண்ணெய் விடவும்.1 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் நூடுல்ஸ் உடைத்து போட்டு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு போட்டு தாளித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு இதில் முட்டை கோஸ் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும்.மஞ்சள் தூள், உப்பு, மேகி மசாலா தூள்களை சேர்த்து நன்றாக எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.பின்னர் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.முட்டை சிறிது வெந்ததும் வேக வைத்த மேகி நூடுல்ஸ் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.பின்னர் சிறிது மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
0
Leave a Reply