சீரக புலவு
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரசி 2 கப், முந்திரி - 10. பச்சை மிளகாய் -2, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க : சீரகம் ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை : பாசுமதி அரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து, உதிராக வடித்து ஆறவிடுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அடிகனமான வாணலியில் நெய்யைக் காயவைத்து, சீரகம், பட்டை தாளித்து முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறுங்கள். முந்திரி சற்று நிறம் மாறியதும், வடித்த சாதம், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். விரைவாக செய்யக் கூடிய, வயிற்றுக்கு இதமான புலவு இது.
0
Leave a Reply