முட்டை கோஸ் வடை.
தேவையான பொருட்கள் -
1கப் முட்டை கோஸ், மெல்லியதாக, பொடியாக நறுக்கியது.
1கப்உளுந்து,1 அங்குலம் தோலுரித்த இஞ்சி,2 பச்சை மிளகாய்,2 மேஜைகரண்டி அவில்,1 சிட்டிகை பெருங்காய பொடி,1 டீஸ்பூன் மிளகாய், பொடி, 1டீஸ்பூன் சுக்கு பொடி,1டீஸ்பூன் கொத்தமல்லி விதை பொடி,
1டீஸ்பூன் மிளகு பொடி,1 சிட்டிகை மஞ்சள் பொடி,1டீஸ்பூன் சீரகப் பொடி,
தேவையான உப்பு,1/4 கப் கறிவேப்பிலை,1/4 கப் கொத்தமல்லி,தேவையான அளவு எண்ணை (refined oil உபயோகிக்க வேண்டாம்.)
செய்முறை -3 கப் நீரில் உளுந்து ஊறவைக்க வடித்து சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் அறைக்க. மாவு கெட்டியாக இருக்கவேண்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு அறைத்த உழுந்து மாவுடன், கோஸ்,, ஸ்பைஸ் பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அவில். சேர்த்து பிசைக. உப்பு பொரிப்பதற்க்கு முன் சேர்க்கஓரு கனமான வாணலியில் எண்ணையை சூடு பண்ணுங்கள். 1/4 கப் மாவை உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டிக்கொள்ளுங்கள். ஜாக்கிரதையாக மெதுவாக வடையை எண்ணையில் சேர்க்க. 4-5 வடைகள் ஒரே சமயத்தில் பொறிக்கலாம். ஜல்லி கரண்டியால் எண்ணையை சூழற்றினால் வடைகள் சமமாக வேகும். 1 நிமிடம் கழித்து திருப்புக.2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். விண்டு பார்த்தால் வெந்துவிட்டதா என்று தெரியும். பேப்பர் டவல் மீது. பொறித்த வடைகளை போட்டால் ஒட்டிய எண்ணையை நீக்கலாம்.சூடான ருசியான சத்தான வடைகள் ருசிக்க தயார்,
0
Leave a Reply