25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வெஜ் புலவு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெஜ் புலவு

தேவையான பொருட்கள் :- பாசுமதி 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3 ,புளித்த தயிர் - கால் கப், தேங்காய்ப்பால் - அரை கப், பட்டாணி (விருப்பப்பட்டால்) - கால் கப், உப்பு தேவையான அளவு. 

அரைக்க: பச்சை மிளகாய் & தனியா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு-6-8 பல், கசகசா ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, பட்டை-1.லவங்கம்- 1. எலக்காய் -1. புதினா ஒரு கட்டு, மல்லித்தழை அரை கட்டு, 

தாளிக்க: பிரிஞ்சி இலை - 2 நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை : அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால். இரண்டரை கப்தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.குக்கரில் நெய். எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு தக்காளி, உப்பு சேர்த்து நன்கு கிளறி தேங்காய்ப்பால், தண்ணீருடன் அரிசியைச் சேருங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News