தக்காளி ஊத்தப்பம்.
தேவையான பொருட்கள் :- தக்காளி 3, வத்தல், 6, சின்ன வெங்காயம் 3,பூண்டு 5 பல், இஞ்சி 1 துண்டு, மிக்ஸியில் நைசாக, ரவை 1 கப், சோதுமை மாவு அரைகப், தேங்காய் துருவல் அரை கப், உப்பு தேவையான அளவு.
செய்முறை - இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.பின் இவை இரண்டையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். ரொம்பவும் தண்ணீராக இரைக்காமல் கொஞ்சம், கெட்டியாகவே கரைத்துக் கொள்ளவும். இத்துடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து மல்லி இலை பொடியாக வெட்டியதைச் சேர்க்கவும். பின் 10 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும். பின் தோசைக் கல்லை சூடாக்கி மாவைக் கலந்து விட்டு நைஸாக ஊற்றாமல் கொஞ்சம் தடிமனாக ஊத்தப்பம் மாதிரி ஊற்றி, மூடி வைத்து 3 செகன்ட்ஸ் மிதமான சூட்டில் வேகவைத்து திருப்பி போடாமல் சிறிதளவு நெய்விட்டு பிரட்டிப் போடாமல் அப்படியே எடுத்து விடவும். தேங்காய்ச் சட்டினியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கம், இது காலை டிபன், இரவு டின்னருக்கு சுவையான ஊத்தப்பம் ரெடி.
0
Leave a Reply