சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி .
காலை உணவாக வரகரிசி மற்றும் சாமை அரிசியைக் கொண்டு, அத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து கஞ்சி செய்யுங்கள். இந்த கஞ்சி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. வேகமாக உடல் எடையையும், தொப்பையையும் குறைக்க உதவி புரியும்.
உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்: வரகரிசி - 100 கிராம் , சாமை அரிசி - 100 கிராம் , பாசிப்பருப்பு - 100 கிராம் , தண்ணீர் - 8 கப் , சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) , பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது) ,பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) சீரகம் - 1 டீஸ்பூன்,மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் , சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன் , உப்பு – சுவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், முருங்கைக்கீரை - 1 கைப்பிடி , எலுமிச்சை – பாதி
செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் வரகரிசி மற்றும் சாமை அரிசியை எடுத்து, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து நீர் ஊற்றி 2 முறை கழுவிவிட்டு, பின் சுத்தமான நீரை ஊற்றி1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.1/2 மணிநேரம் கழித்து, அரிசி மற்றும் பருப்பை கழுவிவிட்டு, பின் அதை குக்கரில் போட வேண்டும். பின் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில்8 கப் நீரை ஊற்ற வேண்டும். அதன் பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்பிறகு அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.பின்னர் குக்கரை மூடி உயர் தீயில்1 விசில் விட்டு, பின் குறைவான தீயில்2 விசில் விட்டு இறக்க வேண்டும்.விசில் போனதும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட வேண்டும்.கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை தேவையான அளவு ஊற்றி கிளறி விட வேண்டும். அதில் 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, குக்கரை அப்படியே அடுப்பில் வைத்து5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பரிமாறினால், சுவையான சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி தயார்.
0
Leave a Reply