ஸ்டப்டு சப்பாத்தி
தேவையான பொருட்கள் :- உள்தொக்கிற்கு தேவையான பொருட்கள் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு சிறிதளவு, வெங்காயம் 1 பொடியாக வெட்டியது. இஞ்சி பூண்டு அரை டீஸ்பூன், கருவேப்பிலை பொடியாக வெட்டியது. தக்காளி 1 பெரியது. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், வத்தல்பொடி முக்கால் டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், கோதுமை மாவு 1 கப், எண்ணெய் 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,
செய்முறை - எண்ணெய் விட்டு, கடுகு வெடித்தவுடன் வெங்காயம் இஞ்சி, பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கி விடவும். நன்றாக வதங்கியதும், மஞ்சள், வத்தல் பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி விடவும், பின் தேங்காய்த்துருவலை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, பொடியாக வெட்டிய மல்லித்தழை அல்லது கஸ்தூரி மேத்தி பவுடர் சேர்த்து இறக்கி விடவும். நன்றாக ஆற விடவும்.
சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக சாப்ட்டாக பிசைந்து எடுத்துக் கொண்டு 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். பின் மாவை எடுத்து சின்ன உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக மெல்லிசாக தேய்த்து எடுக்கவும், திரட்டிய சப்பாத்திக்குள் வதக்கிய தொக்கை நடுவில் வைத்து, பின் ஓரங்களை ஒன்ற சேர்த்து மூடி லேசாக தட்டி விடவும். கையில் எண்ணெய் தடவி மசாலா வெளிவராமல், சின்ன ரவுண்டாகத் தேய்த்து, தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பேனில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சப்பாத்திகளை போட்டு பிரவுன் கலராக வரும் வரையில் சுட்டு எடுக்கவும் இதற்கு சைட்டிஷ் தேவையில்லை. வேண்டுமென்றால் Tomoto ketchep, Mayonize. தயிர் தொட்டு சாப்பிட, சுவையான டிபன் ரெடி.
0
Leave a Reply