கருப்பு கவுணி அரிசி பால் பாயசம்.
தேவையான பொருட்கள் - 1/2கப் கருப்பு கவுணி ,3/4 கப் சக்கரை 3 கப் பால்,2 டீஸ்பூன் நெய் , முந்திரி, ஏலக்காய் தேவையான அளவு
செய்முறை- முதலில் கவுணி அரிசியை நன்கு கழுகி அதன் பிறகு8மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக்கவும்.ஒரு குக்கரில் கவுணி அரிசி 3 பங்கு தண்ணி (1கப் பால் + 2கப் தண்ணி)விட்டு மீடியும் ஹீட்டில் 6-7 விசில் விட்டு ஸ்டவ் ஆப் செய்துடவும்.
பிரஷர் போன பிறகு குக்கரை திறந்து பார்த்தால் நன்றாக வெந்திருக்கும்., அதை சூடாக இருக்கும்போதே நன்றாக மசித்து விட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்அதன் பிறகு சக்கரை,சேர்த்து நன்கு கிளறி,அத்துடன் மீதி பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக சிம்மில். வைத்து கொதிக்க விட்டு ஸ்டவ் ஆப் செய்து கீழே இறக்கி விடவும்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்... மிக ஆரோக்கியம் மிக்க சுவையுடன் கூடிய கருப்பு கவுணி பால் பாயசம் தயார்.
0
Leave a Reply