வெங்காய வடகம்
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2 1/2 கிலோ, பூண்டு – 1/4 கிலோ, உளுத்தம்பருப்பு – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், கடுகு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் தூள் – 50 கிராம், தனியா தூள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 4 கொத்து, உப்பு – 100 கிராம், (நல்லெண்ணெய் – 50 ml தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன்).
செய்முறை:
முதலில் வெங்காயத்தை மட்டும் சிறியதாக(பொடிப் பொடியாக), நறுக்கிக் கொள்ள வேண்டும். கையில் நறுக்க முடியாதவர்கள், வெங்காயத்தை தோலுரித்து, நான்காக வெட்டி, மிக்ஸியில் போட்டுpush பட்டன் வைத்துக்கூட சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்வார்கள். மிக்ஸியில் போட்டு மொழுமொழுவென்று அரைத்து விடக்கூடாது. ரிவர்ஸ் பட்டன் வச்சு ஒரு ஓட்டு ஓட்டிகோங்க.
அடுத்ததாக பூண்டு. பூண்டின் மேல் தோலை மட்டும் உரித்து தனித்தனி திரிகளாக எடுத்துக்கொண்டால், போதும். உள்ளே இருக்கும் தோலை உரிக்க வேண்டாம். அதை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு, ஓட்டி ஒன்றும் இரண்டுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது நல்ல பெரிய, குவாலிட்டியான பிளாஸ்டிக் டப்பாவை, எடுத்துக் கொள்ளுங்கள். பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து வைத்திருக்கும் பூண்டு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, தனி மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மேல் குறிப்பிட்டுள்ள அளவின்படி, சேர்த்து ஒரு கரண்டியை போட்டு, எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கி, வைத்துவிடவேண்டும்.
முடிந்தால் பக்கெட்டோடு எடுத்து, ஒரு குலுக்கு குலுக்கி வைத்து விடலாம். ஒரு வெள்ளைத் துணியை அந்த பக்கெட்டின் மேல், நூல் போட்டு கட்டி மூடி வைத்துவிட வேண்டும். தட்டு போட்டு மூடக்கூடாது.இரண்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். மூன்றாவது நாள் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை, ஒரு தாம்பாளத் தட்டில் மேல், பெரிய பிளாஸ்டிக் கவராக விரித்து, அதன் மேல் இந்த கலவையை கொட்டி வெயிலில் காய வைக்க வேண்டும். வெங்காயத்தில் லேசாக தண்ணீர் விட்டிருக்கும். அதோடு சேர்த்து வெயிலில் காய வைத்து விடுங்கள். 5ல் இருந்து9 நாட்கள் வரை, வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை காயவைக்கவேண்டும். வெங்காயத்தில், ஈரப்பதம் உள்ளதா என்பதை, பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். ஐந்து நாட்களுக்குப் பிறகு6வது நாள்,7வது நாள், எந்த நாளில் வேண்டுமென்றாலும் பின்வருமாறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்(அதிக வெயிலில் ஒன்பது நாள் வரை காய வைத்தீர்கள் என்றால் மொறுமொறுவென்று ஆகிவிடும். உருண்டை பிடிக்க வராது.)
0
Leave a Reply