ஆப்பிள் அல்வா
தேவையான பொருட்கள்: ஆப்பிள் துருவியது 200 கிராம், கோதுமை மாவு - 200 கிராம்,நெய் - 100 மில்லி, ஏலத்தூள் – சிறிதளவு, பால் - 200 கிராம்,முந்திரிப்பருப்பு – சிறிதளவு ,கேசரி பவுடர் – சிறிதளவு,சர்க்கரை - 400 கிராம்
செய்முறை - பாலில் ஆப்பிள் துருவியது போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்து கிளறவும். சீனியையும் கலந்து சற்று இருகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி விடவும் இது சுவையாக இருக்கும். உடம்புக்கு சத்தானது குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள்.
0
Leave a Reply