கட்டிடத்திற்கான பாதுகாப்பு சுவர் கூட முடிக்காமல் அவசர அவசரமாக, ஊராட்சி ஒன்றிய கட்டிடத் திறப்பு விழா .
ராஜபாளையத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் தாலுகா அலுவலகம் அருகே புளியங்குளம் கண்மாய் கரையை ஒட்டி ரூ.3.41 கோடி செலவில் புதிய கட்டடப்பணி கடந்த ஆண்டு தொடங்கியது லேசானமழைக்கேதண்ணீர்தேங்கி நிற்கும் இப்பகுதியில் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துள்ளார்.கட்டடத்துக்கான பாதுகாப்பு சுவர் கட்டி முடிக்கப்படாமலும் அலு வலகத்தின் பின்பகுதி சுவர்களுக்கான எந்த பணியும் தொடங்காமல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஊராட்சி ஒன்றிய தலைவருக்கும், தங்கபாண்டியன், தி.மு.க., எம்.எல்.ஏ.க்கும், , ஊராட்சி ஒன்றிய தலைவருக்குமான உட்பூசலால் தங்கபாண்டியன்,திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.முழுவதும் பணிகள் நிறைவடையாமல் திறந்து உள்ளது குறித்து ,பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம்,சமுசிகப்புரம் கண்மாய் நேரடியாககழிவுநீர் நீர்நிலைகளில் கலக்கவிடப்படுவது தான் எழுதப்படாத விதியாகஉள்ளது. கழிவு கலக்கும் நீர்நிலைகளால் மண்வளம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் உள்ளூர் நீராதாரத்தையும், மழைநீர் சேகரிப்பையும் கேள்விக்குறியாக்கும் ஆபத்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply