25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ராஜபாளையம் அரசு மகப்பேறு  மருத்துவமனை முன் குளமாக தேங்கும் கழிவுநீர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் அரசு மகப்பேறு  மருத்துவமனை முன் குளமாக தேங்கும் கழிவுநீர்.

ராஜபாளையம் நகர்பகுதியில் டெங்கு பாதிப்பை அடுத்து கழிவு நீர் தேக்கத் திற்கு தீர்வு காண்பதற்காக நகரின் நடுவே செல்லும் நெடுஞ்சாலையை கழிவு நீர் கடப்பதற்காக கிழக்கு பகுதியில் இருந்து நான்கு இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே உள்ள சாக்கடை தரைப்பாலம் 8 அடி ஆழத்தில் 6 அடி அகலம் தொட்டி போன்ற அமைப்புடன் உள்ளதால் பிளாஸ் டிக் உள்ளிட்ட கழிவுகள் இதில் குவியலாக தேங்கி நிற்கிறது.

மலையடிப்பட்டி குடி யிருப்புகள், வணிக நிறு வனங்கள், சிறு தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி வெளியேற முடியாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லை, துர்நாற்றம் உள்ளிட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீண்ட வருடங்களாக இருந்து வரும் இப் பிரச் சனைக்கு நெடுஞ்சாலை துறையினர்,  மருத்துவத் துறையினர் இணைந்து முறையான தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News