25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கி வரும்,  மந்தமாக நடைபெறும் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்ட பணிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கி வரும், மந்தமாக நடைபெறும் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்ட பணிகள்

ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக இரண்டாவது நுழைவு பாதை, ஏற்கனவே உள்ள பாதையை விரிவுப்படுத்துதல், மாற்று திறனாளிகளுக்கான சுகாதார வளாகம், முதல் வகுப்பு காத்திருப்பு அறை, கூடுதல் கட்டடம், கண்கா ணிப்பு கேமரா, வாகன காப்பகம், லிப்ட், இரண்டாவது நடை மேம்பாலம், பயணிகள் உள் நுழைந்துவெளியே செல்வதற்கான தனி தனி வசதி என ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருவதுடன் பாதுகாப்பு கருதி ஏற்கனவே இருந்த பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

 வருவாய் அடிப்படையில் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் என். எஸ்.ஜி 5 தரவரிசையில் இருந்து என்.எஸ்.ஜி 4 என்ற தரவரிசைக்கு முன்னேறி உள்ளது. ஓராண்டுக்கு மேல் நடக்கும் கட்டுமான பணி காரணமாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News