குடிமகன்கள், பயணிகள் அல்லாதவர்கள் ஒய்வு எடுப்பதும், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், மனநிலை பாதித்தவர்கள், ஒரு பகுதியை ஆக்கிரமித்து தங்குமிடமாக மாறிய இராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகள்
இராஜபாளையம் நகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனங்கள், அரசு சார்பில் நிழற்குடைகள் அமைந்துள்ளன. பஞ்சு மார்க்கெட், மகப்பேறு மருத்துவமனை, பிஎஸ்கே பார்க், ஐவஹர் மைதானம், சொக்கர் கோயில்,டி.பி. மில்ஸ்.ரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முன்பு, தென்காசி ரோடு அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிழற்குடைகளில் பயணிகள் உபயோகிப்பதற்கு இயலாத வகையில் குடிமகன்கள், பயணிகள், அல்லாதவர்கள் ஒய்வு எடுப்பதும், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், மனநிலை பாதித்தவர்கள், ஒரு பகுதியை ஆக்கிரமித்து தங்குமிடமாகவும், மாற்றி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் பயணிகளுக்கு இடையூ போன்றவற்றால் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் நிழந்குடையை விட்டு நிற்கவேணடி உள்ளது.
PSK பார்க், பஞ்சு மார்க்கெட், அரசு மருத்துவமனை, ஐவஹர் மைதானம் போன்றவற்றில் உள்ள நிழற்குடைகளில் குடிமகன்களும், பயணிகள் அல்லாதோறும், அமர்ந்து கொண்டு பொண்கள், மாணவிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இது தவிர நிழற்குடைகளை முறையாக பராமரிப்பு செய்வதில்லை. இதனால் குடிமகன்கள் விட்டுச் சென்ற பாட்டில், குப்பை பொருட்களும் குவிகின்றன .இதை சரி செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply