திருவில்லிபுத்தூரில் அருள்மிகு ஆண்டாள் திருக்கோவில் திருத்தேர் வலம் வரும் பகுதியில் மேல்நிலை மின் கம்பிகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதை அமைச்சர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அருள்மிகு ஆண்டாள் திருக்கோவில் திருத்தேர் வலம் வரும் பகுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.1.82 கோடி மதிப்பில் மேல்நிலை மின் கம்பிகள், புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடரில் எரிசக்தித் துறை மானிய கோரிக்கையில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆண்டாள் திருக்கோவில் ரத வீதிகளில் உள்ள மேல் நிலை மின் கம்பிகள், புதைவட மின்பாதைகளாக மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி தெற்கு மற்றும் மேற்கு ரத வீதிகளில் மேலே செல்லும் 1.8 கி.மீ. நீள தாழ்வழுத்த மின்கம்பிகளை, 1.524 கி.மீ நீள புதைவட மின்பாதைகளாக மாற்றம் செய்ய மதிப்பீடு அனுமதி பெறப்பட்டு, ரூ.1.82 கோடி செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தேரோட்டத்தின் போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்வதால், மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைப்பதன் மூலம் இந்த பகுதிகளில் மின்விபத்து முற்றிலும் தடுக்கப்படும். மேலும், பொது மக்களுக்கு மின்விநியோகம் தடைபடாமல் வழங்கப்படும் .அதன்படி, இந்த மேல்நிலை மின் கம்பிகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்;ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருமதி லதா, செயற்பொறியாளர்திரு.முனியசாமி(திருவில்லிபுத்தூர்), திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.கு.ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply