Coffee With Collector” என்ற 88-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (27.07.2024) திருத்தங்கல், A.A.A இண்டர்நேஷனல் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 40 தனித்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற ‘‘Coffee With Collector” என்ற 88-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி, பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 88-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவம், வழக்கறிஞர், தொழிலதிபர், விளையாட்டு வீரர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.
மாணவர்கள் ஒரு செயலை தொடர்ந்து விருப்பத்துடன் செய்தால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். மாணவர்கள் கல்வி கற்பதற்கான ஆவர்த்தை பொறுத்தே கல்வி கற்கும் திறன் வளர்கிறது. அதே போல் ஒருவர் புரிந்து படிப்பதற்கும், மனப்பாடம் செய்து படிப்பதற்குமான வேறுபாடுகள் நம்மிடையே உள்ளது . எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதையும், சுருக்கமாக படித்து ஞாபகப்படுத்தி கொள்வது பற்றியும், படிப்பதனால் தன்னுடை அறிவுத்திறனை மேம்படுத்தி சமூகத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தி உயர் கல்வி மற்றும் அரசு தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி அடைவதற்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.
0
Leave a Reply