கோவை மாநகராட்சியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகள் விரைவில் பளபளப்பாக மாறப்போகிறது
கடந்த 20 வருடங்களில் கோவை மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. கோவை மாநகர பகுதிகளில் மக்கள் நெருக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், சாலைகள் விரைவில் பளபளப்பாக மாறப்போகிறது கோவையில் அவினாசி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை என ஏராளமான நெடுஞ்சாலைகள் இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் சாலைகள் சரியாக இருந்தாலும் மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளில் பல இடங்களில் பள்ளமாக காணப்படுகிறது.கோவை மாநகராட்சியை பொறுத்தவரை நீண்டகாலமாக விரிவாக்கம் செய்யப்படவில்லை... விரிவாக்கம் செய்யப்படாத நிலையிலும் கோவையில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 5 லட்சம் வீடுகள் இருக்கிறது. சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். புறநகர் பகுதிகளை சேர்ந்தால் 25 முதல் 30 லட்சம் பேர் கோவையில வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை நகரத்தை பொறுத்தவரை சுமார் 7 ஆயிரம் வீதிகள் உள்ளன.
கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பல இடங்களில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதேபோல் கோவை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் கியாஸ் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர 24 மணி நேர குடிநீர் திட்டம், தொலை தொடர்பு சேவைக்காக கேபிள் பதிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.இதனால் கோவையின் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியப்பதால், இந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.. இந்நிலையில் முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோவை மாநகராட்சி சாலைகள் சீரமைக்கப்பட்டன. 2-ம் கட்டமாக கோவை மாநகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கோவை மாநகரில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டம் (டூரிப்) திட்டத்தின் கீழ் ரூ.50¾ கோடி, நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (என்.எஸ்.எம்.டி.) திட்டத்தின் கீழ் ரூ.28¾ கோடி, மாநில மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.26½ கோடி உள்பட 203 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க மொத்தம் ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
0
Leave a Reply