“ஆய்வு நோக்கில் வ.உ.சி. யும், முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பன்முகப் பார்வையும்” என்ற தலைப்பில், மாநில அளவிலான ஒருநாள் வரலாற்றுக் கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மாவட்ட நிர்வாகம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, இராஜபாளையம் இராஜீக்கள் கல்லூரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து “ஆய்வு நோக்கில் வ.உ.சி. யும், முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பன்முகப் பார்வையும்” என்ற தலைப்பில், மாநில அளவிலான ஒருநாள் வரலாற்றுக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் தலைமையில் (19.07.2024) நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள், இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வை தேடுதல், ஆய்வுப் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுதல், வரலாற்று மாணவர்களை ஊக்கப்படுத்துதல் குறித்து உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தொல்லியலில் ஏற்பட்ட சமீபகால ஆராய்ச்சிகளில் மிக முக்கியமானது அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய ஆய்வு மாணவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் அது குறித்த விழிப்புணர்வை வழங்கியது ஒரு மைல்கல். தற்போது நாம் பெருமையாக பேசிக் பேசிக்கொண்டிருக்கக்கூடிய கீழடியின் தொடக்கமும் அப்படித்தான் இருந்தது. ஆனால், தற்போது வரலாற்று ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தொல்லியல் குறித்த ஆர்வமூட்டும் பயிற்சியின் விளைவாக அங்கிருந்து ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இந்த கீழடி பகுதியினுடைய தரைப்பகுதியில் இருந்து கருப்பு பானை ஓடைகளில் சில குறியீடுகள் இருக்கின்றன என்று ஆர்வம் கொண்டு அந்த ஆய்வை தொடர்ச்சியாக பல கட்டங்களாக பேசியும் எழுதியும் கொண்டு சென்றதின் விளைவுதான் அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது.
அந்த ஆய்வுகள் தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குறிப்பாக வைப்பாற்றங்கரை என்று சொல்லக்கூடிய வைகைக்கும் தாமிரபரணிக்கும் இடையே பாயக்குடிய வைப்பாற்றங்கரையில் நமது மாவட்டத்தில் சில முக்கியமான ஆய்வுக் கருவிகள் இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்களுக்கும் இந்த பகுதியில் இருக்கக்கூடிய ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இந்த செய்தியை எடுத்து செல்ல வேண்டும் என்பது அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளுக்கு இந்த துறையை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.சமூக, அரசியல், விடுதலை என எந்த புரட்சியாக இருந்தாலும், மிகப்பெரிய கனவை சில சாமானியர்கள் அல்லது ஒரு சாமானியன் உருவாக்கிய வரலாறு உலகம் முழுவதும் இருக்கிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வ.உ.சி. அவர்களின் வரலாறு.
சலபதி அவர்கள் வ.உ.சி குறித்து 16 வயதில் ஒரு ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார். அது குறித்து இன்று வரைக்கும் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சமூகத்தின் வ.உ.சி இன்னும் கொண்டாடப்பட்டிருக்கக் கூடியவர்.வ.உ.சி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் பற்றிய புத்தகத்தையும், அவர் குறித்து எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரைகளையும் படிக்க தொடங்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 பக்கம் 15 பக்கங்கள் ஒதுக்கி படிக்க வேண்டும்.
வ.உ.சி.அவர்கள் ஆற்றிய பணிகள் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையோடு இருந்தன. வ.உ.சி. பற்றிய நிறைய புத்தகங்கள் வந்திருந்தாலும், இன்னும் அவர் கனவு கண்ட ஒவ்வொரு தத்துவத்திலும், அது பொருளாதாரமாக தத்துவமாக இருக்கலாம், தமிழின் உடைய இலக்கிய மரபு குறித்த பெருமையாக இருக்கலாம், அவற்றை அவர் கொண்ட தத்துவங்களை அவர் அடைந்த பெருமைகளை எல்லாம் இன்று நாம் மீட்டு உருவாக்கி இருக்கிறோமா அல்லது இன்றைய சமூகம் அது குறித்து மதிப்பிடுகிறதா என்ற கேள்வியை எடுத்து பார்த்தால் இன்னும் நாம் வ.உ.சி குறித்து நிறைய பேச வேண்டும். இதன் தொடர்ச்சியான மரபும், இதன் தொடர்ச்சியான கன்னியையும், அடுத்த அறிவுத் தலைமுறைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் கடத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் உடைய நோக்கம் ஆகும்.இக்கருத்தரங்கில், நூலகர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் திரு.ரெங்கையா முருகன் அவர்கள் வ.உ.சி.யும் தமிழும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எழுத்தாளர் திரு.கா.உதயசங்கர் அவர்கள் வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும் என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர் தமிழ்த்துறை, முனைவர் இரா.இலக்குவன் அவர்கள் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுகளில் வ.உ.சி.யும் பாரதியும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
0
Leave a Reply