வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி (Induction Programme) வகுப்புகள்
விருதுநகர் மாவட்டம், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் (09.07.2024) கல்லூரிக் கல்வித் துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி (Induction Programme) வகுப்புகள் மாவட்டஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிக் கல்வியைச் சிறப்பாக முடித்துவிட்டுக் கல்லூரிகளுக்குள் கனவுகளுடன் வந்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியின் அனைத்துக் கிளைகளிலும் ஊக்குவித்து ஒளிமயமான எதிர்காலம் நோக்கி ஆற்றுப்படுத்துவது, எதிர்காலத்திற்குப் பயன்படும் வளமான நம்பிக்கைகளை அளிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் வலுவான தாக்கங்களை நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனையாளர்களை கொண்டு, புதுமுக மாணவர்களுக்கு மனம் திறந்த உரையாடல் வாயிலாகவும், வினா-விடை நிகழ்வாகவும் ஒருங்கிணைப்பதன் வழிப் புதுமுக மாணவர்களின் அறிவும் உணர்வும் பக்குவப்படுத்தப்பட்டு, அவர்களின் இலக்கு நோக்கிய வெற்றிப் பயணத்தை வழிகாட்டுவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
18 வயது நிரம்பிய பிறகு ஒருவருக்கு உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. ஒரு கல்லூரி பருவம் என்பது குழந்தை பருவத்தில் இருந்து அடுத்து ஒரு சராசரியாக 60 ஆண்டுகள். நம்முடைய சராசரி வாழ்நாள் இந்தியாவில் 73 1ஃ2 வருஷம். நாம் ஒரு 80 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வோம் என்று சராசரியாக எடுத்துக் கொண்டோம் என்றால், அடுத்து ஒரு 60 ஆண்டுகள் இந்த பூமியில் நீங்கள் வாழ்வதற்கு தேவையான வாழ்வுக்கு உங்களை தயார் செய்வதுதான் இந்த கல்லூரி படிப்பினுடைய நோக்கம். ஒவ்வொருவருக்கும்; மூன்று விதமான வாழ்க்கை உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தொழில் சார்ந்த வாழ்க்கை ஆகும்.தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவரவருடைய குடும்பம், உறவினர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு நாளைக்கு 8-லிருந்து 10- மணி நேரம் வரை தொழில்சார்ந்த வாழ்க்கைக்கு நாம் செலவிடுகிறோம். தொழில் சார்ந்த வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் இடைவெளி இருப்பது தான் சமூக வாழ்க்கை.
சமூகவியல் மனிதருக்கான இலக்கணத்தை சொல்கின்ற பொழுது மனிதன் ஒரு சமூக விலங்கு. அது ஏன் சமூக விலங்கு என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் இந்த சமூகத்தில் சில நியதிகளோடு வாழ வேண்டும். சமூகத்தில் பல நேரங்களில் எழுதப்படாத சட்டங்களுக்கும் எழுதப்படாத மரபுகளுக்கும் நாம் கட்டுப்பட்டு வாழக்கூடிய சூழ்நிலைகளை சமூகம் உருவாக்கும்.மாணவர்கள் கல்லூரியில் நன்கு படிப்பதன் மூலம் உங்களின் அறிவு பெருகும். அறியாமை என்ற இருள் போகும், புது சிந்தனைகள் உருவாகும். படித்ததை வாழ்வியலோடு தொடர்புப்படுத்தி அவற்றை பயன்படுத்த முடியுமா என்று யோசிக்க முடியும். படிப்பின் மூலமாக பெறக்கூடிய அறிவின் மூலமாக நாளை ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்கோ, அல்லது தொழில் தொடங்கி நடத்துவதற்கோ உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்வீர்கள். அப்படி தயார் படுத்திக் கொள்வதற்கான முதல் அடிப்படை கல்லூரியில் இருந்து பட்டத்தை பெறுவது.
எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியாத ஏதேனும் பிரச்சினைகள் வரும்போது, அதனை எதிர்கொள்வதற்கு தேவையான அறிவையும் மனமுதிர்ச்சியும்; இந்த கல்லூரி பருவம் பெற்று தரும்.நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களையும், எங்களுடைய அனுபவங்களையும் சொல்வது எங்களின் கடமையாகும். இந்த நிகழ்ச்சியின் நோக்கமும் இது தான். தமிழ்நாடு அரசின் கல்லூரி பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய அரசு அலுவலர்கள் நேரடியாக சென்று கல்லூரிகளுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று, அவர்களுக்கு நலத்திட்டங்கள் பற்றியும், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இன்றைக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை பற்றி எடுத்து சொல்லவேண்டும். நான்கு சுவர்களுக்குள் இருப்பது தான் உலகம் என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. பாரதியார் இதனை “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார்.” என்று பெண்களின் முக்கியத்துவத்தை பற்றி கூறியிருக்கிறார்.
0
Leave a Reply