உலக இரத்தக்கொடையாளர்கள் தினம்-2024
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 14.06.2024) உலக இரத்ததான தினத்தைத் முன்னிட்டு, நடத்தப்பட்ட இரத்தான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, இரத்தானம் தானம் வழங்கினார். பின்னர், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துக்கல்லூரியில், தமிழ்நாடு மாநில குருதிபரிமாற்றுக்குழுமம்சார்பில்நடத்தப்பட்டஇரத்ததானமுகாம்களில்அதிகமுறைஇரத்ததானம்செய்தகொடையாளர்களுக்குமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள்.
அதன்படி, 3 முறைக்கு அதிகமாக குருதி வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், வாழ்நாளில் 100 முறைக்கும் மேல் குருதி வழங்கிய கொடையாளர்களுக்கு கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்த தானம்வழங்குபவர்களைகௌரவப்படுத்துவதற்காகவே கொண்டாடபட்டு வருகிறது. உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை.
இந்திய அளவில் இரத்தத்திற்கான தேவை ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக அதிகமாக நடக்கக்கூடிய சாலை விபத்துகளினால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டிற்கு ஏறத்தாழ 1 இலட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதில் சுமார் 15000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.மேலும், விபத்துகளினால் காயமுற்றவர்கள், உள் காயமுற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்கான அறுவை சிகிச்சையின் போது இரத்தம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பெரும்பாலான இடங்களில் அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.குறிப்பாக அந்தந்த மருத்துவப் பணிகளில் எலும்பு முட்டு அறுவை சிகிச்சைகள் எல்லாம் தொடர்ச்சியாக நடக்கின்றன. அது மாதிரியான சாலை விபத்துகளில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும்போது அதற்கான ரத்தம் உடனடியாக தேவைப்படும் போது அந்த ரத்தத்தை இரத்த வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.
ஆனால் அவ்வாறு வழங்கப்படும் இரத்ததிற்கு மாற்றாக இரத்த தானம் சமமாக இருக்கிறது என்றால் அது குறைவாகத்தான் இருக்கின்றது. தமிழ்நாட்டில் சுமார் 80 சதவீதம் அளவிற்கான இரத்தம் இரத்த தானம் செய்பவர்களால் மட்டுமே கிடைக்கிறது. அதில் நான்கில் ஒரு பகுதி தன்னார்வ அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆகியோர்களால் இரத்தானம் மூலம் கிடைக்கின்றது. நமது மாவட்டத்தில் ஏறத்தாழ 5000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு அமைப்புகளில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் மூலமாக பெறப்படும் இரத்தத்தை தான் நாம் பயன்படுத்துகின்றோம். இந்த இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு தேவைப்படும் இரத்த அளவில் பாதியளவுதான் கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இரத்தம் தேவைப்படும் காலகட்டத்தில் இரத்தத்தை தேட வேண்டி இருக்கிறது. கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதன் மூலம் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு தேவையான இரத்தத்தை பெற முடியும்.சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சீதாலட்சுமி, மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply