அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (14.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, குல்லூர் சந்தை ஊராட்சியில், ரூ.140.06 இலட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும்,குல்லூர் சந்தை கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.50 இட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் கட்டும் பணிகளையும் மற்றும் 14-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியினையும்,பின்னர், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்;பள்ளியில், ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை (SMART CLASS) அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
0
Leave a Reply