1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இறுதி நாள்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) இறுதி நாளான இன்று (18.06.2024) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S , அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.
வெம்பக்கோட்டை வட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)11.06.2024 முதல் 18.06.2024 வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கள் நீங்கலாக) நடைபெற்றது. வெம்பக்கோட்டை, கீழராஜகுலராமன் ஆகிய நான்கு குறுவட்டங்களில் உள்ள 37 வருவாய் கிராமங்களுக்கான கணக்குகள் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது.மேலும், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, வருவாய் தீர்வாயத்தின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களிடம் குறைகள் தீர்க்கும் பொருட்டு 327 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 15 பயனாளிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களை விரைந்து நிறைவு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.இந்த வருவாய் தீர்வாயத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 4 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு குடும்ப அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
0
Leave a Reply