25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் .

.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்,  சிவகாசி நகரங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில பகு திகளில் பலத்த வெடிசப்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

நேற்றிரவு 9:08 மணிக்கு ஒரு நிமிடத்துக்கு ஒரு சில இடங்களில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,  கிருஷ்ணன் கோவில், குலாலர் தெரு,தன்யா நகர், அசோக் நகர், வன்னியம்பட்டி, செண்பகத்தோப்பு, நாச்சியார்பட்டி, கிருஷ் ணன் கோவில், செங்குளம், பாட்டக்குளம் உள்ளிட்ட ஏராளமான  கிராமங்களில் ,லேசானஅதிர்வுகளும்,மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிராமங்களில் பலத்த வெடி சத்தத்துடனும் நில நடுக்கம் ஏற்பட்டது.

பொது மக்கள் அச்சத்துடன்வீட்டிற்குள் இருந்து தெருக்களுக்கு வந்தனர். பல வீடுகளில் சுவரில் மாட்டி இருந்த போட்டோக்கள் கடிகாரங்கள் ஆடின. சில வீடுகளில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் நகன்றதாக மக்கள் தெரிவித்தனர். 

சில மணித்துளிகள் வரை உணர்ந்த சத்தம் சிலருக்கு பூமிக்கு அடியில் பலத்த வெடிகுண்டு வெடித்தது போலவும், ஒரு சிலருக்கு கனரக வாகனம் செல்வது போலும், கேட்டதாக தெரிவித்தனர்.

சிவகாசி அருகேபாறைப்பட்டி,துரைச்சாமிபுரம்,குவாரிபகுதியிலிருந்து,நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,தரைமட்டத்திலிருந்து 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News