25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி  புதியகட்டிடம் திறப்பு விழா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா .

ராஜபாளையம் - தென்காசிசாலையில் அரசு ஆஸ்பத்திரிகடந்த 1973-ம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு பின்னர் 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆஸ் பத்திரியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர்,புத்தூர்,இனாம்கோவில்பட்டி, சேத்தூர், தேவதானம்,கோவிலூர்,சொக்கநாதன்புத்தூர், தேவிபட்டினம், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம்,சங்கரபாண்டியாபுரம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த ஆஸ்பத்திரி மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரி பொது மக்களின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது.

 ரூ.40 கோடியில் 448 படுக்கை, 5 தளங்களுடன் அமைக்கப்பட்ட கட்டிடத்தில்,எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை அரங்கம், காது மூக்குதொண்டை பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, லேப் வசதி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, பொது அறுவை சிகிச்சை பிரிவு, லிப்ட் வசதி, அதிநவீன விபத்து சிகிச்சை வசதி, அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தொட்டி ,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்து நவீன வசதிகளுடன் இந்தஆஸ்பத்திரி செயல்பட உள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் (வெள்ளிக்கிழமை ) முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதியகட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News