25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் லோகா, சின்னம் அறிமுகம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் லோகா, சின்னம் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 26-அக் 5ல் டில்லி, நேரு மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான 100 நாள் 'கவுன்ட்-டவுண்' நேற்று துவங்கியது.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் லோகா, சின்னம் அறிமுகம் செய் யப்பட்டன. இந்தியாவின் பாரம்பரியத்தை போற் றும்வகையில், 'கார்ட்டூன்' வடிவ குட்டி யானை 'விராஜ்' சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், "இந்தியாவில் முதல் முறையாக உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் நடக்க இருப்பது பெருமையான விஷயம் என்று இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா என்றார்.  100 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 186 பதக்கங்கள்  வழங்கப்படும்.

இப்போட்டிகளை சிறப்பாக நடத்துவோம். இதன் மூலம் 2036 ல் ஒலிம்பிக், பாராலிம் பிக்கை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்து வோம்," என்றார்.தன்னம்பிக்கை, வலிமையின் அடையாளமாக 'விராஜ்' சின்னம் விளங்குகிறது என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 'பாரா' உலக தடகளத்தின் விளம்பர துாதரான நடிகை, எம். பி., கங்கனா ரணாவத் கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News