ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள்
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில், ருக்மணியம்மாள் அரங்கத்தில் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமையில் 'முப்பதும் தப்பாமே' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான திருப்பாவை போட்டிகள் பரிசளிப்பு விழா நடந்தது. இம்பீரியல் பேட்டரி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகிக்க ,சங்கத் தலைவர் அனிதா வரவேற்றார்.
மாவட்டத்தின் சிவகாசி, விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளி கல்லுாரிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பாவை பாடல், ஓவியம், பேச்சுப் போட் டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அகத்தியர் தமிழ் சங்கம் கோதைநாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
0
Leave a Reply