இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர்வரத்து பகுதிகளை ஒட்டி பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் விவசாயம் நடந்து வருகிறது. நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு பகுதியாக நெல் நடவு பணிகளை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.
தேவதானம், சாஸ்தா கோவில் ஒட்டிய பகுதிகளில் விவசாய பணிகளை முதலில் தொடங்கியதும், சேத்தூர், அயன் கொல்லங்கொண்டான், முகவூர், இராஜபாளையம் பகுதி விவசாயிகள் கிணற்று நீர் இருப்பு, கண்மாய் நீர் வரத்தை பொறுத்தும், பணிகளை தாமதித்து தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாய பணிகளுக்கு முன்பு போல் ஆட்கள் கிடைக்காததுடன் கூலியும், அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக இயந்திரம் நடவுக்கு பரவலாக பலரும் மாறி வருகின்றனர்
0
Leave a Reply