பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா
சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.எஸ். குமாரசாமிராஜா சுதந்திர போராட்டத்திற்காக, ஆந்திர சிறையில் இருந்த போது, பூபதி ராஜூ மூலம் கூட்டுறவு வங்கி பற்றி அறிந்து ,1924ல் அவரது பெயரிலேயே தொடங்கி 23 வருடம் தலைவராக இருந்து வழி நடத்தினார். தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு நகர வங்கிகளில் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கியால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட இரண்டு வங்கிகளில் இதுவும் ஒன்று என்று . விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் * செந்தில்குமார் வாழ்த்தி பேசுகையில் கூறினார்.
வங்கி தலைவர் ராதா கிருஷ்ணராஜா வரவேற்றார். நுாற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டு, பி.எஸ் குமாரசாமி ராஜா உருவப் படம், கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, துணைப் பதிவாளர் வீரபாண்டி, வங்கி இயக்குனர்கள், ராஜூகள் மகாசபை நான்கு கோட்டை தலைவர்கள், வங்கி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.வங்கி துணைப்பதிவாளர் ஜான் கபிரியேல் நன்றி கூற விழா நடைபெற்றது .
0
Leave a Reply