பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி.
ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், செண்பகத் தோப்பு, சாலியன் தோப்பு, இடையன்குளம் குட்ட தட்டி, திருவண்ணா மலை, பந்தப்பாறை, பிள்ளையார் குளம், தொட்டியபட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மார்கழி, தை மாதங்களில் பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். இந்தாண்டு நல்ல விளைச்சல் உள்ளது. தற்போது பனங்கிழங்குகள் எடுக்கப்பட்டு கொட்டை கிழங்குகள் 25 கொண்டகட்டு ரூ.150-க்கும் விற்கப்படுகிறது. மற்ற கிழங்குகள் 25 கொண்ட கட்டு ரூ.100-க்கும் விற்கப்படுகிறது என பனங்கிழங்கு வியாபாரிகள் தெரிவித்தனர்.நகரில் பல்வேறு பகுதிகளிலும் பனங்கிழங்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0
Leave a Reply