தனியார் பாட்டாசு தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி ஊராட்சி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள், (17.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழில்களில் தமிழகத்தில் முன்னனி மாவட்டமாகவும், பட்டாசு தொழிலானது அதிகப்படியான நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க கூடிய தொழிலாகவும், அதிகமானோர் பட்டாசுத் தொழிலை சார்ந்துள்ள மாவட்டமாகவும் விருதுநகர் உள்ளது. இதில் பல்வேறு சூழ்நிலையில் எதிர்பாராத காரணங்களாலும், இயற்கை சூழ்நிலைகளின் மாறுபாட்டாலும் எதிர்பாராத நிலையில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களை பாதுகாத்திடவும், விபத்தில்லாத தொழிலாக பட்டாசு உற்பத்தியினை உருவாக்கிடும் வகையில் தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலம் ஆராய்ந்து, தகுந்த வழிமுறைகளையும், விதிமுறைகளையும் உருவாக்கி இத்தொழிலை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், கீழத்திருத்தங்கலில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பட்டாசு தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை கலக்கும் விதம், நிர்ணயிக்கப்பட்ட அளவு, பணியாளர்கள் பணியாற்றிட தேவையான இட அளவு, பாதுகாப்பான சூழ்நிலை குறித்தும், பட்டாசு தொழிற்சாலையில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply