சமூக நீதி நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.
விருதுநகர், கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், (17.09.2026) தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள், தலைமையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.தமிழக அரசின் உத்தரவின்படி தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ம் தேதி ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக“ அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்,எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்”. என்ற உறுதிமொழியினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திரு.ஜான்சன் தேவசகாயம், உதவி ஆணையர் (கலால்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி மோகனா, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply