25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா.

ராஜபாளையம் வனத்துறை நீலகிரி வரையாடு திட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், ராஜபாளையம் ராஜூக் கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் வரவேற்றார். தேவராஜன்

கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், விவசாயிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பிரசனைகள் ஏற்படுகிறது. மயில்கள், காட்டு பன்றிகள், மான்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது . நகர் பகுதியில் நாய்களின் தொல்லைகளும் அதிகமாகிறது. மான்களின் இனப்பெருக்கம் அதிகரித்து உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதி கரித்துள்ளது.

இதற்கு காரணம் இயற்கை சமநிலை மாறி வருவது ஆகும். மான்கள் இனப்பெருக்கம் பெரிய அளவில் நடைபெற்று வருவதற்கு காரணம் புலிகள் எண்ணிக்கை குறைந்து  வருவதுதான். புலிகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் அரசு, வனத்துறை சார்பில் இயற்றப் பட்டுள்ளது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *