25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ,சென்னையில்  250 சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் - 2025' சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ,சென்னையில்  250 சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் - 2025' சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி.

சென்னை நுங்கம்பாக்கம், எஸ்.டி.ஏ.டி டென்னிஸ் திடலில், சென்னை ஓபன் எனப்படும், 'டபிள்யு.டி.ஏ., 250 சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் - 2025' போட்டி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, , அக்டோபர், 27 முதல் நவம்பர், 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு, பரிசுத் தொகையாக, 31 லட்சத்து 58,100 ரூபாய் வழங்கப்பட உள்ளது.உலக மகளிர் டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து, இப் போட்டியை நடத்துகின்றன.

துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி: இந்தியாவில் புகழ்பெற்ற, டென்னிஸ் தொடர்களில் ஒன்றான, சர்வதேச டென்னிஸ் போட்டியான, 'சென்னை ஓபன் -2025' சென்னையில் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நமக்கு மிக முக்கி யமான ஆண்டு. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். இந்த போட்டிக்காக, முதல்வர் ஸ்டாலின், 12 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அத்துடன் நடப்பு ஆண்டில், ஆசிய சர்பிங், உலகக் கோப்பை ஹாக்கியும் தமிழகத்தில் நடைபெற உள்ளது. 

சென்னையில் நடக்கவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025 ஆண்டு போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் துணை முதல்வர் உதயநிதிக்கு 2024ம் ஆண்டு மலரை வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News