டைமண்ட் லீக் தடகளத்தின் ஈட்டி எரிதல்
16வது சீசன் டைமண்ட் லீக் தடகளத்தின் 4வது சுற்று பிரான்சின் பாரிசில் நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார்.
இவர், முதன் முறையாகதோகா டைமண்ட் லீக் (மே 16) போட்டியில் 90 மீ.,க்கும் (90.23) மேல் எறிந்து இருந்தார். இம்முறை முதல் வாய்ப்பில், அதிக பட்சம் 88.16 மீ., துாரம் எறிந்தார்.. கடைசி, 6வது வாய்ப்பில் 82.89 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும், நீரஜ் சோப்ரா (88.16) முத லிடம் பிடித்து, பட்டம் கைப்பற்றினார்.
0
Leave a Reply