சர்வதேச, தமிழ்நாடு ஹாக்கி போட்டிகள் .
சர்வதேச ஹாக்கி
புரோ லீக் 6வது சீசன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்கின்றன . இதற்காக பெல்ஜியம் சென்ற இந்திய அணி, தனது கடைசி போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது. இதில் இந்திய அணி 4-3 என வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, தனது 14வது போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது, இதில் இந்திய அணி, 2 வெற்றி, 3 'டிரா', 9 தோல்வி என 10 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது
தமிழ்நாடு ஹாக்கி
முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி ,தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவிடம் வீழ்ந்தது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது.
5-1 என்ற கோல் கணக்கில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சண்டிகார் அணி மணிப்பூரை தோற்கடித்து 2வது வெற்றியை தனதாக்கியது. ஆந்திராவை மற்றொரு ஆட்டத்தில் ,தமிழக அணி 11-0 என்ற கோல் கணக்கில், 2-வது வெற்றியை பெற்றது.
0
Leave a Reply