திருச்சுழி மற்றும் நரிக்குடி (Focus block) ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50 சதவீத மானியத்தில் ஊட்டச் சத்து பெற்று பயனடையலாம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட ஊராட்சிய ஒன்றியங்களில் ஏழ்மை நிலையிலுள்ள, சினையுற்ற கறவை பசுக்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச் சத்து வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார் 5000 கால்நடை வளர்க்கும் விவசாயிகளை மேம்படுத்திட தமிழக அரசால் திட்டம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேற்படி, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி மற்றும் நரிக்குடி (Focus block) ஊராட்சி ஒன்றியத்திற்கு திட்டக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 100 விவசாயிகள் வீதம் இரண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
எனவே இத்திட்டத்தின் மூலம் திருச்சுழி மற்றும் நரிக்குடி (Focus block) ஊராட்சி ஒன்றியத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50 சதவீத மானியத்தில் ஊட்டச் சத்து பெற்று பயனடையலாம். இதன் மூலம் கறவை பசுக்களின் பால் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த இயலும் .கறவை பசுக்களுக்கு வழங்கப்படும் ஊட்டச் சத்துக்கள் TANUVAS / AIRLIVAS / AAVIN மூலம் பெற்று வழங்கப்படும் .
ஒரு சினையுற்ற கறவை பசுவிற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ ஊட்டச்சத்து வீதம் 4 மாதங்களுக்கு (120 நாட்களுக்கு) 360 கிலோ ஊட்டச்சத்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் . 1 கிலோ ஊட்டச்சத்து ரூ.35 (360 கிலோ X 35=12,600)
ஓரு சினையுற்ற கறவை பசுவிற்கு ஒரு மாதத்திற்கு 1 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் வீதம் 4 மாதங்களுக்கு (120 நாட்களுக்கு) 4 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் .1 கிலோ ஊட்டச்சத்து ரூ.100 (4 கிலோ X 100 =400)
ஒரு சினையுற்ற கறவை பசுவிற்கு 360 கிலோ ஊட்டச்சத்து மற்றும் 4 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500 + பயனாளியின் பங்குத் தொகை ரூ.6500 ஆகும்
இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் .
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், 2025-26 ஆம் ஆண்டில் மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள விவசாயிகளாக இருக்க வேண்டும் . ( விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறலாம் .)
திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளி சொந்தமாக கறவை பசு வைத்திருக்க வேண்டும் .
பயனாளிகள் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும் . மேலும் உள்ளுரில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே தங்களது மாடுகளிலிருந்து பெறப்படும் பாலினை அளிக்க வேண்டும்.
பெண் பயனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மாற்றுத்திறனாளிகள் / ஏற்கனவே உறுப்பினராக உள்ள பால் உற்பத்தியாளர்கள் / பட்டியலினம் / பழங்குடியினர் இவர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் .
எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply