மகிழம்பூ, தேன்குழல் செய்ய....
* பலகாரங்களை எடுத்து வைக்க காற்றுப் புகாத சம்படங்கள் போன்றவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பலகாரங்கள் சுட ஆரம்பிக்கவும்.
* மகிழம்பூ, தேன்குழல் செய்ய, இரண்டு கப் அரிசி மாவு, முக்கால் கப் பயத்தம் பருப்பு, முக்கால் கப் நெய், கால் கப் கடலைப்பருப்பு என்ற அளவு சரியாக இருக்கும். இதை பெருங்காயத்துாள் மற்றும் எள் சேர்த்து செய்யலாம்.
* தட்டை செய்யும்போது, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையும் மஸ்லின் துணியின் மீது வைத்து தட்டைகளாகத் தட்டினால், மாவிலுள்ள ஈரத்தை துணி இழுத்துக் கொள்ளும். பின்னர், எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுத்தால், தட்டை மொறுமொறுப்பாக இருக்கும்.
*வாய் அகலமான இரும்பு வாணலி அல்லது அடிகனமான வாணலியை பலகாரங்களைப் பொரிக்க உபயோகிக்கவும்.
தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.
0
Leave a Reply