அஜீரணம் இருக்கும்போது.....
இஞ்சியைத் தோல்நீக்கி, நறுக்கி உப்பு கலந்த மோரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு, அஜீரணம் இருக்கும்போது. சிறிது மென்று தின்றால் நிவாரணம் கிடைக்கும். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். |
அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோஸை வேகவைத்து, அந்தச் சாறை தினசரி காலை வெறும் வயிற்றில் அரை தம்ளர் குடித்து வந்தால் தக்க நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டாலும் புண்கள் சீக்கிரம் ஆறாது.வாணலியில் போட்டு அதற்கு ஆவாரம் இலை விழுதை நல்லெண்ணெய் விட்டு, கைபொறுக்கும் அளவில் சூடு படுத்தி, புண்ணின் மீது வைத்து சுத்தமான பருத்தித் துணியால் கட்டவும். ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் புண்கள் காய்ந்து ஆறிவிடும்.
0
Leave a Reply