அறையில் கொசு வராமல் இருக்க….
மாமர பூக்களை உலர்த்தி பொடி செய்து படுக்கும் முன் அறையில் பரவலாக தூவி விட்டால் அறையில் கொசு வராது.
பால்கோவா செய்யும்போது கடாயில் இருந்து இறக்கிய பிறகு அதில் நெய், பொடி செய்த ஏலக்காய் மற்றும் பச்சைக் கற்பூரம் இவை அனைத்தையும் நன்றாக கலக்கி சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்ய முடியாத அளவுக்கு காய்கறிகள் நிறைய இருந்தால், அதன் மீது ஈரத் துணியை போட்டு மூடி வையுங்கள் வாடாமல் இருக்கும்
பிரெட் ஸ்லைஸ்களில் சால்ட் பட்டர் அல்லது நெய் தடவி அதன்மேல் இட்லிப் பொடி தூவி, துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
சாம்பார் தாளிக்கும் போது கொஞ்சம் நெய்விட்டு தாளித்தால் நல்ல மணமாக இருக்கும்.
0
Leave a Reply