விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கான புதிய பொதுப் பார்வையாளராக திரு.ரஞ்சித் குமார் லால்,அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு ஏற்கெனவே பார்வையாளர்கள் வருகை தந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளராக ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த திரு.நவநீத்குமார்,I A S ., அவர்களுக்கு பதிலாக, புதிய பொதுப் பார்வையாளராக திரு.ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள் (மொபைல் எண் 9489985879) நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் பார்வையாளரின் தொலைபேசி எண் வாயிலாகத் தெரிவிக்கலாம்.
0
Leave a Reply