சீட் பெல்ட் அணிவது கட்டாயம். சோனு சூட் வேண்டுகோள்!
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய, ஹிந்தி மொழிகளிலும் நடிகர் சோனு சூட், நடித்துள்ளார். மக்கள் மத்தியில் கொரோனா காலத்தில் இவர் செய்த உதவியால் மேலும் பிரபலமானார். சமீபத்தில் இவரது மனைவி, அவரது சகோதரி உடன் சென்ற கார் நாக்பூர் அருகே விபத்தில் சிக்கியது.லேசான காயங்களுடன் அவர்கள் தப்பினர். சோனு சூட் கூறுகையில் "விபத்தில் என் மனைவி, அவர் சகோதரி சீட் பெல்ட் அணிந்ததால் தான் உயிர் தப்பினர். இன்றைக்கு பெரும்பாலும் சீட் பெல்ட்டை கடமைக்காகவும், போலீசிடமிருந்து தப்பிக்கவும் அணிகின்றனர். பின் சீட்டில் அமர்ப வர்கள் அதனை கண்டுகொள்வது இல்லை. அவர்களுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அது அவர்களின் உயிரையும், குடும்பத்தையும் காப்பாற்றும்'' என்கிறார்.
0
Leave a Reply