மீன் குழம்பு ருசியாகவும் மணமாகவும் இருக்க….
மீன் குழம்பு, புளிக் குழம்பு, கறி குழம்பு வைக்கும் போது, நல்லெண்ணெய் சேர்த்தால், மிகவும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.
அப்பளம் வடகம் மீன் சிக்கன் வறுக்கும் போது ரிபைண்ட் ஆயில் ஊற்றிவறுத்தால்வாசனையில்லாமல் இருக்கும்.
ரவாதோசை கோதுமை தோசை உடனடியாக செய்ய மாவுடன் கொஞ்சம் மோர் கலந்து தோசை சுட்டால் தோசை நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
முள்ளங்கி, கேரட், வெங்காயம், பீட்ரூட், போன்ற காய்கள் வாங்கி வந்தவுடன் அதன் தலைப்பகுதியை வெட்டி விட்டு வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.
மாவு புளித்து போய்விட்டால் அதில் கொஞ்சம் பால் ஊற்றி கலந்து தோசை சுட்டால் புளிக்காது.
0
Leave a Reply