ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி
ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி நடந்ததுமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மலர், ஐ.எஸ்.டி.இ தமிழ்நாடு செயலாளர் சவுரிராஜன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகை சான்றிதழ்கள் வழங்கினர்.
முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ராஜ கருணாகரன், கணிதத் துறை தலைவர் பசரிகொடி, பொது மேலாளர் செல்வராஜ் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் தென்காசி மாவட்டங்களை சேர்த்த 51 பள்ளிகளில் இருந்து 1380 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர்.பேராசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
0
Leave a Reply