03 JUNE விளையாட்டு போட்டிகள்
செஸ்
நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடக்கிறது. 6வது சுற்றில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 19, (நம்பர்-5), ஐந்து முறை உலக சாம்பியன் ஆன உலகின்'நம்பர்-1' வீரர், நார்வேயின் கார்ல்சனை34, எதிர்கொண்டார். இப் போட்டியில், குகேஷின் 62வது நகர்த்தலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கார்ல்சன். நீண்ட நேரம் விளையாடப்படும் முறையிலான போட்டியில் 'கிளாசிக்' செஸ் குகேஷ், முதன் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார்.
கிரிக்கெட்
அஹமதாபாத்தில் இன்று நடக்கும் பைனலில்பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி நான்காவது முறையாக பைனலில்(2009,2011,2016,2025) விளையாட உள்ளது. பஞ்சாப் அணி2வது முறையாக(2014,2025) பைனலில் பங்கேற்கிறது.இரு அணிகளும் இதுவரை கோப்பை வென்றதில்லை. இன்று அசத்தும் அணி, முதல் முறையாக கோப்பை வெல்லலாம்.
துப்பாக்கி சுடுதல்
உலக கோப்பை பாரா துப்பாக்கிசுடுதல் போட்டி தென் கொரியாவில் நடக்கிறது. பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்குப் பின் நடந்த முதல் 'உலக' தொடரான இதில் 26 நாடுகளில் இருந்து 192 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ருபினா (566 புள்ளி), சுமேதா (565), ஷிர்ஸ்டி (564) இணைந்து 'டாப்-3' இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.
அடுத்து பைனலில் நடந்த சிறப்பாக செயல்பட்ட சுமேதா,235.2 புள்ளி எடுத்து, முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஷிர்ஸ்டி (234.9)வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ருபினாவுக்கு (132.5) 7வது இடம் தான் கிடைத்தது.
ஆண்களுக்கான10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் ருத்ரான்ஷ்,236.3 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீரர் மணிஷ் நார்வல் (236.0) வெள்ளி கைப்பற்றினார்.
0
Leave a Reply