4 படங்கள் ஏப்ரல் 10ல் ரிலீஸ்.
ஐபிஎல் போட்டிகள், தமிழக சட்டசபை தேர்தல், பள்ளி மாணவர்கள் தேர்வுகள் என தமிழகத்தில் இவ்வளவு விஷயங்களுக்கு மத்தியிலும் வாரா வாரம் படங்கள் வந்த வண்ணம் உள்ளன.
நடிகர் தம்பி ராமையா கதையில், அவர் மகன் உமாபதி இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள படம் 'டிஎன் 2026'. சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் தொடர் பான கதையில் உருவாகி உள்ளது. இந்தவாரம் ஏப்., 10 "கெஸ்ட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மனிதன் தெய்வமாகலாம், டிஎன் 2026" ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.
0
Leave a Reply