25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு முகாம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (25.08.2025) நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டத்தின் கீழ்,  அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, I A S.,  அவர்கள் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அருப்புக்கோட்டை பகுதி மாணவர்களுக்காக நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலம் உயர் கல்வி சேர்க்கைக்கான முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .

பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வியை படிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நன்றாக படித்து அவர்களுடைய குடும்பங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், குடும்ப சூழ்நிலை, உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் தேர்ச்சி பெற முடியாமலும், தனித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் தமிழக அரசு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் படிக்க விருப்பமுள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் எந்த  சூழ்நிலையிலும் படிப்பை தொடர முடியாமல் இருக்கக்கூடாது என்பது தான்.

இந்த நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இன்றளவும் உயர் கல்வி சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த படிப்புகள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தொழிற்நுட்ப கல்வி இடங்களுக்கு நேரடி சேர்க்கையும், வேலைவாய்ப்புகள் சார்ந்த வழிகாட்டல்களும் வழங்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் உள்ள பல்வேறு வகையான படிப்புகள் மற்றும் இடங்கள் குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவும், கல்விக் கடன் வழங்குதல் குறித்தும் பல்வேறு துறைகள் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் முயற்சியை கைவிடக்கூடாது. தோல்வி என்பது நிரந்தர தோல்வி அல்ல. தோல்வி அடுத்த கட்டத்திற்கு போவதற்கான ஒரு பாடம் மட்டுமே. நம் வாழ்க்கையில் எந்த நிலைமையிலும் கூட விடா முயற்சி செய்தால்; முன்னேறி விடலாம். தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000/-, கல்விக்கடன், உதவித்தொகைகள் போன்ற நிறைய அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அரசு மாணவர்களுக்காக செயல்படுத்துகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்வில் நீங்களும் உயர வேண்டும் உங்களுடைய குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டிற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் நல்ல பெயiர் எடுத்து தர வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News