25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


சர்க்கரை வள்ளிக்கிழங்கின் நன்மைகள் ,பிரச்சனைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் நன்மைகள் ,பிரச்சனைகள்

அளவுக்கு அதிகமான சத்துக்களை கொண்டது சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. ஒருசிலருக்கு இந்த கிழங்கு அலர்ஜியை தந்துவிடும். வைட்டமின்A,D,C,B6 பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து என நிறைய சத்துக்களை கொண்டது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு. நிறைய வைட்டமின்கள் இருப்பதால்தான், செரிமான கோளாறுகளை இந்த கிழங்கு சீர்செய்கிறது

இதயநோய், மாரடைப்பு போன்ற ஆபத்திலிருந்தும் நம்மை காக்கிறது..இதிலுள்ள வைட்டமின்D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்க துணை புரிகிறது. எலும்புகளை உறுதிப்படுத்த உதவுகிறது. இதனால், பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு பேருதவி புரிகிறது.

 அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டக்கூடியது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குகள். உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது..

 நிறைய நார்ச்சத்து உள்ளதால், உடலிலுள்ள நச்சுகள், கழிவுகளை வெளியேற்றுகிறது.. வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதில், சர்க்கரைவள்ளி கிழங்கின் முக்கியத்துவம் அதிகமானது..

குளிர்காலங்களில் இந்த கிழங்கை சாப்பிடுவதால், நம்முடைய சருமம் பாதுகாக்கப்படும்.. தோலில் அலர்ஜிஅரிப்புகள் ஏற்பட்டால், சர்க்கரை வள்ளிக்கிழங்கை மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து, அதனுடன்3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, பேஸ்ட் போல கலந்து, அரிப்பு உள்ள இடத்தில் தடவினாலே நிவாரணம் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இநத் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த உணவு நார்ச்சத்து, ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை.

 கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகமாக துரிதப்படுத்தும்.பசியையும் கட்டுப்படுத்திவிடும்.

சர்க்கரை நோய் இருப்பவர்களும் இந்த கிழங்கை டாக்டர்களின் அனுமதியை பெற்று அளவாக சாப்பிடலாம். ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இதிலிருந்தாலும்,கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது. எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்காது

.பிறந்த குழந்தைகள்7 மாதங்களில் இருந்து உணவு கொடுக்க துவங்கும்போது, இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து தரலாம்.குழந்தைகள் வளர்ந்த பிறகும் குடல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.குழந்தையிலிருந்தே இந்த கிழங்கை சாப்பிட தந்தால், குடலுக்கும் அது பழகிவிடும்.

சர்க்கரைவள்ளி கிழங்கில், பொட்டாசியம் சத்து நிறைய உள்ளதால், இதை அதிகமாக சாப்பிடும்போது,பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.  சர்க்கரைவள்ளி கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால், இதை அதிகமாக சாப்பிட்டால்,சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். 

கல்லீரல் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்கனவே இருப்பவர்களும் இதை தவிர்த்துவிடலாம். நிறைய நார்ச்சத்து இருப்பதும், செரிமான கோளாறினை உண்டுபண்ணிவிடும். இந்த கிழங்கை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது,முடி, புருவங்களில் உள்ள முடி உதிர்தல்,வெடிப்புற்ற உதடு, வறண்ட சருமத்தை தந்துவிடும்.சிலசமயம் கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News